தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் வெடிமருந்து விற்பனை கிடங்குகளில், இன்று மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரம், கீழதட்டப்பாறை மற்றும் மேல தட்டாப்பாறை ஆகிய இடங்களில் தனியார் வெடிமருந்து விற்பனை கிடங்குகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கல்குவாரி மற்றும் கிணறு வெட்டுவதற்காக தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வெடி மருந்துகள் வாங்கி செல்வர்.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக இன்று வெடிமருந்து விற்பனை கிடங்குகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, வெடிமருந்து கிடங்குகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வுசெய்த அவர், வெடி மருந்துகளை கல்குவாரி மற்றும் கிணறு வெட்டுவதற்காக மட்டுமே விற்பனை வேண்டும் என்றும், வருவாய் துறையினரிடம் உரிய சான்று பெற்று வருபவர்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், முன் பின் தெரியாதவர்களுக்கோ, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு விற்பனை அவற்றை செய்யக்கூடாது என்றும் எச்சரித்தார். இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி ஊரக தனிப்பிரிவு எஸ்ஐ நம்பிராஜ், தட்டப்பாறை உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த தேவாரம் டி.மீனாட்சி
தமிழ்நாட்டில் கொரோனா 3-வது அலையை தவிர்ப்பதற்காக தடுப்
மகாராஷ்டிராவில் கொள்கை முரண்பாடு கொண்ட சிவசேனா, தேசிய
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்
கேரள மாநிலத்தின் சுகாதாரத் துறை மந்திரியான வீணா ஜார்ஜ தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து < டெல்லி இப்போது கொரோனா வைரசின் நான்காவது அலையை எதிர்கொ உலகம் முழுவதையும் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் த கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம் தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல் மதுரைக்கு காரில் மூட்டை மூட்டையாக கலர் ஜெராக்ஸ் எடுத் சசிகலா மீண்டும் அதிமுகவிற்குள் வந்துவிடக்கூடாது என் கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து உயிரிழந்
