இந்தோனேசியாவில் மத்திய சுலவேசி மாகாணத்தில் நேற்று முன்தினம் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் அங்கு மவுண்டோங் மாவட்டத்தில் புரங்கா கிராமத்தில் செயல்பட்டு வந்த தங்கச்சுரங்கம் கடும் சேதம் அடைந்தது. இதனால் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 5 பேர் இடிபாட்டில் சிக்கி உயிரிழந்தனர். 70 பேரை காணவில்லை.
இந்த தகவலை சுலவேசி மாகாண பேரிடர் மேலாண்மை முகமை தலைவர் டட்டு பமுசு டோம்போலொட்டு, செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், “தங்கச்சுரங்க இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 5 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 70 பேரை காணவில்லை. அவர்களில் பலர் இடிபாடுகளில் சிக்கி நிலத்தடியில் புதைந்து போய் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காணாமல் போனவர்கள் குறித்து அவர்களது குடும்பத்தில் இருந்து தகவல்கள் பெற்றுள்ளோம்” என கூறினார்.
காணாமல் போனவர்களை தேடும் பணியும், மீட்பு பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஷாங்காய் கட்சியின் செயலாளரான லி கியாங் (வயது 63) சீனாவில
ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்ற
ஆப்கானிஸ்தானில் வன்முறையால் இந்த ஆண்டின் முதல் 6 மாதங
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் வழக்கு விசார
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில்,இலங்கைக்கான பயணத
அமெரிக்காவின் 71ஆவது வெளிவிவகார அமைச்சராக ஆன்டனி பிளி
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர
அவுஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது ரகமத
பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம், 1971-ம் ஆண்டில் பிரிந்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்று முன்தினம் காலை 9
மியான்மரில் இன்று காலை 5.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிடையே கடுமையான போர் இடம்ப
சீனாவில் பிறந்தவர் பெண் பத்திரிகையாளர் செங் லீ. இவர் க
