பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளார் ஈராக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
பாப்பரசர் ஒருவர் ஈராக் செல்லும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 75 ஊடகவியலாளர்களுடன் பாப்பரசர் நேற்று முன்தினம் பிற்பகல் 2.00 மணியளவில் தலைநகர் பக்தாத்தைச் சென்றடைந்தார். நான்காயிரம்; வருடங்களைக் கொண்ட ஈராக்கின் கிறிஸ்தவ வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த விஜயமாக இதனைக் கருதமுடியும் என்று அல்-ஜசீரா ஊடக வலையமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி, பாப்பரசரை வரவேற்றார். பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளாருக்கு விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.
ஈராக்கின் வடபகுதி பிராந்தியமான குர்டிஷ் பகுதியின் தலைநகராக கருதப்படும் இர்பில் நகருக்கும் அவர் விஜயம் செய்துள்ளார்.. ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் இர்பில் நகரில் தங்கியிருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
ஈராக்கின் சனத்தொகையில் 70 சதவீதமாகவுள்ள ஷியா முஸ்லிம்களின் தலைவர் ஆயத்துல்லா அலி சிஸ்தானியையும் அவர் நஜப் நகரில் சந்திக்கவுள்ளார்.
சிறுபான்மை சுன்னி முஸ்லிம்களின் தலைவர்களும் யதீசி இனத்தவரகளின் முக்கியஸ்தர்களும் இதன்போது பாப்பரசரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்



80 கிமீ நீள ராணுவ வாகன அணிவகுப்பு பெய்ஜிங்கை நோக்கிச் ச
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற
ரஷ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நிலையை பலவீனப
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த தடு
ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்ற
சகாராவில் கடந்த 2015-ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பை நிறுவிய ஷராவி
அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவரின் சடலம் பயணப்பெட்
முதன் முறையாக ஜெர்மனியில் டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்
பிரித்தானிய விமான நிலையங்களில் இருந்து பறக்கும் பிரி
உக்ரைன் இராணுவத்திற்கு சொந்தமான ஆளில்லா விமானம் குரோ
தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ர
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடி
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்ற
சீன கம்யூனிஸ்டு கட்சியின் 100-வது ஆண்டு விழா இன்று கொண்ட
உக்ரைனில் நடந்த சண்டையின் போது பிரான்ஸ் நாட்டவர் ஒருவ
