கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிப்புக்குள்ளான அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
அங்கு பைசர் மற்றும் மாடர்னா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 5 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்காவில் அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்த மூன்றாவது தடுப்பூசியாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் ஜான்சன் அண்ட்ஜான்சன் கொரோனா தடுப்பூசி தயாரிப்புக்கு அந்நாட்டு மருந்து நிறுவனமான மெர்க் துணை நிற்கும். இதன்மூலம் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி கிடைக்கும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி மருந்தை ஒரு முறை செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று நாட்டு மக்களிடம் உரை
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்கு திடீரென்
கடுமையான உள்ளிருப்பு கட்டுப்பாடுகளுக்கு பெரும்பான்ம
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் உரு
இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்க்கெல் இருவரும் கட
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை எம்.பி. பிரமிளா ஜ
ஐரோப்பாவையும் ஆசியாவையும் கடல் வழியாக இணைக்கும் வகைய
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் காஜ
அமெரிக்காவின் மிகவும் பாதுகாப்பான இடமாக கருதப்படும்
உக்ரைனை தன்வசமாக்கும் நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷி
