குஜராத் மாநிலம் வதோதரா நகரில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 1,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த சிறையில் உள்ள கைதிகள் அனைவரும் ஒன்றிணைந்து வானொலி நிலையம் ஒன்றை அமைத்துள்ளனர். இந்த வானொலிக்கு சிறை வானொலி என பெயரிடப்பட்டுள்ளது.
சிறை வளாகத்துக்குள் ஸ்டூடியோவை அமைத்துள்ள அதிகாரிகள் கைதிகள் வானொலியை கேட்பதற்கு ஏதுவாக சிறை முழுவதும் 60 க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகளை நிறுவியுள்ளனர். கைதிகளில் ஒரு சிலருக்கு வானொலியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிறைச்சாலையில் கைதிகள் நல அலுவலர் மகேஸ் ரத்தோட் கூறுகையில், “ இந்த வானொலி சேவையின் முக்கிய நன்மை என்னவென்றால் பல்வேறு பிரச்சினைகள் பற்றி கைதிகள் மத்தியில் கல்வி மற்றும் விழிப்புணர்வை பரப்ப முடியும்” என்றார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நடைபெறும் வன்முறை சம்
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல
கோவை சுகுணாபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில
சட்டப்பேரவையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள
தங்கத்தின் விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வர
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பா
