ஐதராபாத்தை சேர்ந்த அசாதுதின் ஓவைசி, மஜ்லிஸ் முஸ்லிமின் என்ற கட்சியை நடத்தி வருகிறார்
இந்த கட்சி அகில இந்திய அளவில் முஸ்லிம் சமுதாயத்தினரிடம் அதிக செல்வாக்குடன் இருக்கிறது. பீகார் மாநில தேர்தலில் மஜ்லிஸ் கட்சி தனித்து போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றது. பல இடங்களில் இந்த கட்சி அதிகளவில் ஓட்டை பிரித்தது.
இதன் காரணமாகத்தான் அங்கு லல்லு கட்சி கூட்டணி ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில் மேற்கு வங்காளத்திலும் மஜ்லிஸ் கட்சி தனித்து களம் இறங்குகிறது. மேற்கு வங்காளத்தில் முர்ஷிதாபாத், மால்டா, தெற்கு தினாஜ்பூர், வடக்கு தினாஜ்பூர் ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர்.
அவர்களின் ஆதரவு தங்கள் கட்சிக்கு கிடைக்கும் என்று கருதி இந்த பகுதியில் அதிகளவில் மஜ்லிஸ் கட்சி போட்டியிட உள்ளது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மொத்தமுள்ள 22 தொகுதியில் 13 தொகுதியின் வேட்பாளர்களை மஜ்லிஸ் கட்சி இறுதி செய்துள்ளது. மற்ற மாவட்டங்களிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.
அங்கு ஓவைசி தீவிர பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். 13-ந் தேதி முதல் அவர் தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார். முதலாவதாக சாகர்திகியில் பிரசாரம் செய்யும் அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்த வாரம் இந்தியா
இந்தியாவை சேர்ந்த தீபன்ஷூகெர் என்பவர் அமெரிக்காவில்
சமீபத்திய ப்ளூம்பெர்க் கொவிட்-19 பின்னடைவு தரவரிசைப்ப
ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக
துனிசியா நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஸ்வாரா நக
விண்வெளியில் மனிதர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கும்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ள நி
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக நட உக்ரைன் மீது ரஸ்யா தொடர்ந்தும் தாக்குதல்களை தொடுத்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டு 31-ம் தே ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அந அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், தனது த
