வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் பிக்கப் ரக வாகனமும், மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (12) காலை 10.20 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பண்டாரிக்குளம் அம்மன் கோவில் வீதியில் இருந்து வைரவபுளியங்குளம், புகையிரத வீதி நோக்கி திரும்ப முற்பட்ட மோட்டர் சைக்கிளை, குருமன்காடு சந்தியில் இருந்து வவுனியா நகரம் நோக்கு புகையிரத வீதியில் பயணித்த பிக்கப் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 30 வயது மதிக்கதக்க இளைஞன் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, விபத்தை ஏற்படுத்திய பிக்கப் ரக வாகனம் காயமடைந்தவரை ஏற்றிக் கொண்டு விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து உடனடியாகவே சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மற்றும் இன மத நல்லிணக்கத
நாடளாவியரீதியில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட
திருகோணமலை மாவட்டம் குச்சவெளிப் பிரதேசத்தில் கடந்த 06.0
நாட்டில் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளு
சந்தையில் தற்போது காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்க
யாழில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சிங்கள மொழியி
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாட்டில் ஸ்திரத்தன்மைய
விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந
இலங்கைக்கு முன்னைய அமர்வுகளில் வழங்கிய வாக்குறுதிகள
நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்க
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு கடன் மறுசீரமைப்
நாட்டில் இதுவரை 4,178,737 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத
மட்டக்களப்பில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் கடந்த 2
போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனத் தரிப்பிட பிரச்சி
புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவு கோரப்படுவதா
