More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தொகுதியை திருப்பி கொடுத்து விடலாமா? கடுப்பில் சிதம்பரம்
தொகுதியை திருப்பி கொடுத்து விடலாமா? கடுப்பில் சிதம்பரம்
Mar 13
தொகுதியை திருப்பி கொடுத்து விடலாமா? கடுப்பில் சிதம்பரம்

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலிருந்து காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமான சூழலில் திமுக இருந்துவருகிறது. இருப்பினும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கேட்ட தொகுதி ஒதுக்காமல் திமுக கறார் காட்டியது பலரும் அறிந்த ஒன்றுதான் .கடந்த தேர்தலில் 40 சீட்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் 25 சீட்டுக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது .அதுவும் பலகட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு ,கேஎஸ் அழகிரி மேடையில் கண்ணீர் சிந்தி பெற்றது தான்.



அதேபோல் காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியை தென் மாவட்டங்களில் களமிறக்கி பிரச்சாரம் செய்யும்போது இது குறித்து கருத்து தெரிவித்த துரைமுருகன் இப்போதாவது அவர்களுக்கு புத்தி வந்ததே என்ற தொணியில் கமென்ட் அடித்தது காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு இடையில் இணக்கமான சூழல் இல்லை என்ற நிலையை வெளிப்படையாக காட்டியது.



இந்நிலையில் காரைக்குடியில் புதுவயல் காங்கிரஸ் பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். அங்கு கட்சி நிர்வாகிகள் பலர் கூட்டத்திற்கு வராத நிலையில் ப.சிதம்பரம் விரக்தியடைந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் மத்தியில் பேசிய அவர், ” கட்சி என்றால் கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும் . இல்லாவிடில் அடுத்த முறை 25 சீட் கூட கிடைக்காது. கூட்டத்துக்கு ஆட்கள் வராதது வேதனையாகவுள்ளது. காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் கட்சியினரிடம் ஒத்துழைப்பு இல்லை.

காங்கிரஸ் தொண்டர்கள் சரியில்லை என்றால் தோழமைக் கட்சிகளை நம்பி தேர்தலை சந்திக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியினரிடம் ஒத்துழைப்பு இல்லை . காரைக்குடி தொகுதியை திருப்பி கொடுத்து விடலாமா? என்று வேதனையுடன் பேசியுள்ளார்.



முன்னதாக திமுக கூட்டணியில் பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், ஊத்தங்கரை, ஓமலூர், உதகமண்டலம், கோவை தெற்கு, காரைக்குடி, மேலூர், சிவகாசி, திருவைகுண்டம், குளச்சல் விளவங்கோடு, கிள்ளியூர், ஈரோடு கிழக்கு, தென்காசி, அறந்தாங்கி, விருதாச்சலம், நாங்குநேரி, கள்ளக்குறிச்சி, திருவில்லிபுத்தூர், திருவாடனை , உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறை, வேளச்சேரி உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug18

கேரள சுகாதாரத் துறை வெளியிட்ட செய்தியில், கடந்த 24 மணி ந

Aug02

தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டச

Feb18

மும்பை பாலிவுட்டில்  நடிகை  கெஹானா வசிஸ்த்  ஆபாச ப

Jun20

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று மத

Mar09

 கடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 51-வது வார்டில்

Feb09

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு

Mar06

தி.மு.க. -காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவ

Mar20

நேற்று ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவருமான சண்

Nov21

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிர

Jul26

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்ப

Mar13

சாத்தூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர

Jun25

மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலு

Aug01

கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில

Dec31

ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சியில் நீராடச்

Oct24

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (04:30 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (04:30 am )
Testing centres