முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் கட்சியின் இளைஞரணி பிரமுகரும் சமூக செயற்பாட்டாளருமான பீற்றர் இளஞ்செழியன் அவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்
அண்மையில் அவரை பற்றிய ஊடகங்களில் தவறான செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்த நிலையில் குறிப்பாக அந்த செய்தி உண்மைக்கு புறம்பான செய்தி எனவும் அவ்வாறான ஒரு நிலைமை இல்லை எனவும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார்
குறித்த செய்தியில் புதுக்குடியிருப்பு நகரில் உள்ள புத்தகக் கடை ஒன்றில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்திருந்த பீற்றர் இளஞ்செழியன் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பணம் இதுவரை செலுத்தவில்லை எனவும் இது தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த வழக்கு இணக்க சபைக்கு விடப்பட்டது எனவும் இணக்க சபைக்கு கடிதம் அனுப்பியும் அவர் வருகை தரவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது
இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்த பீற்றர் இளஞ்செழியன் அவர்கள் இந்த செய்தி முற்றுமுழுதான பொய் எனவும் இந்தக் கடன் தொகையானது ஏற்கனவே செலுத்த பட்டுள்ளதாகவும் இவ்வாறான போலி செய்திகளை வெளியிட்டு தன்னுடைய பெயருக்கும் கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்த நினைப்பதாகவும் இது தொடர்பில் தான் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
தொடருந்து சேவையில் நேரடியாக தொடர்புபடும் சேவையாளர்க
உலகில் பெண்களின் உரிமைகளுக்காக ஒரு தினம் கொண்டாடப் பட
வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் 20 ஆம் திகதி வரை 2222 கொரோனா
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட
நாட்டில் இதுவரை 2,500,428 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத
ரம்புக்கனை பொலிஸ் பகுதிக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த
யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் அமைந்துள்ள தம
வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் உட்பட நாட்டில் உள்
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்
அண்மை நாட்களில் டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறு
சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளத
இராணுவத்தால் நடத்தப்படும் 'புனர்வாழ்வு' மையங்களில
யாழ். நகரிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் சாதாரண தர
கடந்த 2019ம் ஆண்டு உயிர்தத ஞாயிரன்று மட்டு சியோன் தேவாலய
