ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது
ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 577 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 135 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 327 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் ஓமனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 871 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 92.4 சதவீதமாக இருந்து வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக நேற்று மட்டும் 3 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 1,620 ஆக அதிகரித்தது.
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் 88 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் இந்திய எல்லைக
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த சில மாதங்க
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ஒரே நாள் இரவில் மழையும்,
பிரேசிலின் தெற்குப் பகுதியில் உள்ள சாண்டா கேடரினா மாக
நேட்டோ என்று அழைக்கப்படும் ‘வடக்கு அட்லாண்டிக் ஒப்ப
உக்ரைனுக்கு எதி
1990 ஆம் ஆண்டு சோவியத்தை தகர்த்தவர்கள் தங்கள் கனவு நிறைவ
இங்கிலாந்தின் ஐரிஷ் கடற்கரை நகரமான பிளாப்பூல் அருகே உ
உக்ரைனின் கார்கிவ் நகருக்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழ
உக்ரைனின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ விர
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
