வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபரானார். ஆனால், அவரது வெற்றியை அப்போதைய அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, பைடனின் வெற்றியை உறுதி செய்ய நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தில் நடந்த எலக்டோரல் வாக்குப் எண்ணிக்கையின் போது டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கேபிடால் கட்டிடத்தில் தனக்கு ஆதரவாக செயல்படும்படி ஆதரவாளர்களை தூண்டியதாக டிரம்ப் மீது, நாடாளுமன்றத்தில் 2வது முறையாக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அவர் அதில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று முன்தினம் பேட்டி அளித்த முன்னாள் அதிபர் டிரம்ப், `கேபிடால் கட்டிட கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களால் எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆதரவாளர்களால் அங்கிருந்த எம்பி.க்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. அவர்கள் கேபிடால் கட்டிடத்திற்கு உள்ளே சென்றார்கள். அங்கு இருந்த போலீசாருடனும், பாதுகாவலர்களுடனும் கைகுலுக்கி, கட்டிபிடித்து தங்கள் உறவை தெரியப்படுத்தினர். பிறகு வெளியே வந்து விட்டனர்,’ என்று தெரிவித்துள்ளார்.
புதிய சாத்தான்-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ஐரோப்பியக
இந்த நூற்றாண்டின் விதியை தீர்மானிக்க போகும் மிகப்பெர
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள சுக்குர் ரோகி என்ற
கிழக்கு லடாக்கில் பங்கோங்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெ
இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன
கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின
ஆப்கானிஸ்தான் நாட்டை
ரஷ்யப் பகுதிகளை தாக்கி அழிக்கக் கூடிய ராக்கெட் அமைப்ப உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு மாதத்தை கடந்தது சோமாலிய பிரபல ஊடகவியலாளர் ஒருவர் அந்த நாட்டு தலைநகர் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைட இந்த கன மழையால் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதி கடு ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் பதுங்கியிருக்கும் பயங்கரவ
