உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அதே வேளையில் அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. ஜனாதிபதி ஜோ பைடன் தனது பதவி காலத்தின் முதல் 100 நாட்களுக்குள் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து இருந்த நிலையில் 60 நாட்களிலேயே அது முடிந்துவிட்டது.
இந்த நிலையில் வருகிற 19-ந் தேதிக்குள் அமெரிக்காவில் உள்ள வயது வந்தோரில் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். எஞ்சிய 10 சதவீதம் பேருக்கு மே 1-ந் தேதிக்கு முன்னதாக தடுப்பூசி போடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இன்று நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளின் காரணமாக 90 சதவீத அமெரிக்கர்கள் ஏப்ரல் 19-ந் தேதிக்குள் கொரோனா தடுப்பூசியை பெறும் தகுதி பெறுகிறார்கள். ஏனெனில் நம்மிடம் போதுமான தடுப்பூசிகள் உள்ளன. நமது இந்த முன்னேற்றம் அமெரிக்கர்களாக நாம் ஒன்றாக செயல்படும் போது நாம் என்ன செய்ய முடியும் என்பதற்கு ஒரு குறிப்பிடத்தக்க சான்றாகும். ஆனால் நான் எப்போதும் கூறுவதைப் போல் எல்லோரும் தங்கள் பங்கை செய்ய வேண்டும் நாம் இன்னும் இந்த கொடிய வைரஸ் உடனான போரில் இருக்கிறோம். நாம் நமது பாதுகாப்புகளை மேம்படுத்துகிறோம். ஆனால் போரில் வெற்றி பெறவில்லை” என கூறினார்.
இந்தோனேசியா அதன் தலைநகரான ஜகார்த்தாவை கைவிட்டு, போர்ன
உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சி வெற்றி பெற
உக்ரைனில் ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ர
தாய்வான் மீது சீனா முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தின
உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ்
96 மணி நேரத்தில் கீவ் வீழ்ந்துவிடும் என்றும், ஒரு வாரத்
டுபாயில் கட்டப்பட்ட புதிய இந்து கோவிலின் திறப்பு விழா
ஏவுகணை சோதனை பாகிஸ்தான் நேற்று கண்டம் விட்டு கண்டம் ப
இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில் ரஷ்ய
வடக்கு சிரியாவில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் இரண
இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து 18 ஆவது ந
ஆப்கானிஸ்தானில் வன்முறையால் தலிபான்கள் அதிகாரத்தைக்
