அன்சோரேஜ்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அன்கரேஜில் இருந்து 97 கி.மீ. தொலைவில் பனி மலை மீது விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் தங்கி அங்கிருக்கும் பனிமலைகளை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாகும்.
கடந்த சனிக்கிழமையன்று, உலக பணக்காரர்களில் ஒருவரான செக் குடியரசை சேர்ந்த பெட்ர் கெல்னர் (56) உட்பட 3 சுற்றுலா பயணிகள் விடுதிக்குசென்றுள்ளனர். அங்கிருந்து ஹெலிகாப்டரில் 2 வழிகாட்டிகள் மற்றும் ஒரு விமானியுடன் பனிமலைகளை சுற்றிப்பார்ப்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளனர்.
நிக் பனிப்பாறை அருகே ஹெலிகாப்டர் வந்தபோது எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது. இதில் கெல்னர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். கெல்னர் 2020ம் ஆண்டு போர்பஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர். இவரது சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் கோடியாகும்.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவ
உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, சீனாவு
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவெல்னிக்கு மூன்ற
இலங்கைத் தீவில் அனைவரது மனித உரிமைகளும் உறுதிசெய்யப்
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஏவுகணைகள் தாங்கிய போர்
இங்கிலாந்தில், இளம்பெண் ஒருவர் காலை ஓட்டப்பயிற்சிக்க
சிங்கப்பூரில் 1970-ம் ஆண்டுக்கு பிறகு அந்த நாட்டின் மக்க
நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல
லிஸ் ட்ரஸ், உயர்மட்ட வருமான வரி வீததத்தை குறைப்பதற்கா
