வலி. வடக்கில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெல்லிப்பளை காவற்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 15 மின் நீர்ப்பம்பிகள், வாகனங்கள் சுத்திகரிப்புக்குப் பயன்படுத்தப்படும் மோட்டர், புள்ளுவெட்டி இயந்திரம் உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்காவற்துறையினர் கூறினர்.
காங்கேசன்துறை, தெல்லிப்பளை ஆகிய இடங்களைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் நேற்றுக் கைது செய்யபட்டனர்.
விசாரணைகளின் போது சந்தேக நபர்களினால் கடந்த ஒன்றரை வருடங்களாக திருடப்பட்டு வந்த பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
காங்கேசன்துறை பிராந்தியத்துக்கு பொறுப்பான மூத்த காவற்துறை அத்தியட்சகர் ஆனந்த ஹொட்டகச்சியின் வழிகாட்டலில் தெல்லிப்பளை காவல் நிலைய பொறுப்பதிகாரி காவற்துறை பரிசோதகர் மெர்சான் இந்துக்கலா சில்வா மற்றும் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ஆனந்த சுமணசிறி தலைமையிலான பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
சந்தேக நபர்கள் இருவரும் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் இன்று முற்படுத்தப்படவுள்ளனர்.
பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளையை பற்றாக்குறை
தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெரு
வெளிநாடுகளில் தொழில் புரிவோர் தங்கள் ஊதியத்தை டொலர்
கொழும்பு பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயது சிறு
2021 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் (உ/த) பரீட்சை இன்று காலை 8.30 ம
ரம்புக்கனையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடத்த
நியூயோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச் சபையில் சர்வதேச நாணய ந
யால வன சரணாலயத்தில் அரியவகை கருஞ்சிறுத்தை ஒன்றை சுற்ற
மட்டகளப்பில் நேற்று மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அட
கொழும்பில் இருந்து மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்கள
தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் உரிமை நாட்டுமக்கள் அ
வவுனியா நெடுங்கேணி பகுதியில் மகனின் மரண செய்தி கேட்டு
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை
சிறைச்சாலை கட்டளைச்சட்டத்தின் கீழ் சிறைக்கைதிகளின்
சமுர்த்தி தொகையைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குச் சென்
