அமெரிக்காவின் வாஷிங்டனில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தை சுற்றி போலீசார் பாதுகாப்பு வளையம் அமைத்து பணியில் ஈடுபட்டிருப்பது வழக்கம். நேற்று முன்தினம் மதியம் 1 மணி அளவில் கார் ஒன்று பாதுகாப்பு தடுப்புகளை மோதி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தது.
உடனடியாக பாதுகாப்பு போலீசார் காரை சுற்றி வளைத்தனர். அதிலிருந்து இறங்கிய வாலிபர், கத்தியால் அருகிலிருந்த போலீசார் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்.இதில், 2 போலீசார் படுகாயம் அடைந்தனர். உடனடியாக, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி அந்த வாலிபரை சுட்டுக் கொன்றனர். அவர், இண்டியானா மாகாணத்தை சேர்ந்த நோவா கிரீன் (25) என்பது தெரியவந்துள்ளது.
‘நேஷன் ஆப் இஸ்லாம்’ என்ற மதவாத அமைப்பை சேர்ந்த அந்த வாலிபர், எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். காயமடைந்த போலீசாரில் வில்லியம் பில்லி இவான்ஸ் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த ஜனவரி 6ம் தேதி டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் மற்றொரு தாக்குதல் சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில், துப்பாக்கி முனையில் தன
இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசி
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ம
இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு ஏப்ரல்
பிரேசிலின் தெற்குப் பகுதியில் உள்ள சாண்டா கேடரினா மாக
வங்காளதேசத்தில் சாலை போக்குவரத்துக்கு அடுத்தபடியாக
உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும்
ஓர் ஆண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்க
ரஷியா போர் தொடுத்துள்ள உக்ரைன் பகுதிகளில் பொதுமக்களை
தென் அமெரிக்க நாடான சிலியில் அரசுக்கு எதிராக பல மாதங்
இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி முத
சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற, ‘எவர் கிவன்’ கப்ப
மியன்மாரில் இராணுவ ஆட்சி தோல்வியடைய, ஐ.நா சபையால் என்ன
ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனின் 4 பிராந்தியங்கள் உ
