தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தவண்ணம் உள்ளனர். பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே நடிகர் அஜித் தன் மனைவி ஷாலினியுடன், திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார். வாக்குப்பதிவு தொடங்கியதும், அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி இருவரும் வாக்களித்துவிட்டு புறப்பட்டுச்சென்றனர்.
இதேபோல் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார். சென்னை தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் வாக்களித்தனர். மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் தன் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்சரா ஹாசனுடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.
ஆட்கொல்லி கொரோனாவை ஒழிப்பதற்காக பல்வேறு உலக நாடுகளைப
தமிழக சட்டசபை தேர்தலில்
மராட்டிய சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு முதல்-மந்திரி பத இந்திய விமானப்படையின் 89-வது தினம் இன்று கொண்டாடப்பட்ட சென்னை: நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பியுள்ள திருப்பதி அருகே உள்ள புங்கனூர் அலிபிரி சாலையை சேர்ந்த இந்தியாவின் புகழ்பெற்ற புண்ணிய தீர்த்தங்களுள் ஒன் தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சு கேரளாவில் நடந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்க உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் பிரதமர் மோடி ரூ.1,500 பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், செல்போன் ஒட்டுகே கவிஞர் தாமரைக்கும் அவரது கணவர்
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு போராடிவரும சமையல் சிலிண்டர் விலை மாதந்தோறும் உயர்ந்து வரும் நிலை
