திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏலியம்பேடு கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் முட்புதர்கள் அடர்ந்து காணப்படுகிறது. இந்த முட்புதரில் பெண்ணின் அழுகுரல் சத்தம் கேட்டது. அந்த பகுதி பொதுமக்கள் சென்று பார்த்தபோது 2 கால்கள் செயலிழந்த மூதாட்டியை யாரோ முட்புதரில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.
பொதுமக்கள் அவரை மீட்டு பொன்னேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் அவரை சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சென்னை மணலி பெரியசேக்காடு கிராமத்தை சேர்ந்த காந்திமதி (வயது 85) என்பது தெரியவந்தது. மூத்த மகன் ரவி. கொத்தனார் வேலை செய்கிறார். 2-வது மகன் சங்கர். அருள் வாக்கு சொல்லக்கூடியவர்.
காந்திமதியை அவரது 2-வது மகன் சங்கர் ஏமாற்றி வேறு ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து முட்புதரில் வீசி விட்டு சென்றது தெரியவந்தது.
பெற்ற மகனே வயதான கால்கள் செயலிழந்த தாயை கொஞ்சமும் இரக்கமில்லாமல் செய்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்ட சங்கரை கைது செய்ய வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
ரிஷி சுனக் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் வெற்றி
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் திடீரென தனது த
நாட்டில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது.< ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு ஐ. நா சபையின் ஜெனிவா மனித உரிமைச் சபை அமர்வு ஆரம்பமாகிய இந்தோனேசியா அதன் தலைநகரான ஜகார்த்தாவை கைவிட்டு, போர்ன கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா உகாண்டா நாட்டில் நடைபெறும் சர்வதேச பாரா பேட்மிண்டன் ப ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள பதற்றம சீனாவில் கொவிட் -19 தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு மக்க சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
சீனாவில் முதன்முறையாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்
