குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம் இந்தியா வர இருந்தார். இருப்பினும் இங்கிலாந்தில் கொரோனா வைரசின் 2வது அலை வீசியதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஏப்ரல் மாத இறுதியில் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவார் என அறிவிக்கப்பட்டது.
டெல்லி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்யும் அவர், தொழிலதிபர்களுடன் கலந்துரையாடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அது மட்டுமின்றி இந்தியாவில் இரட்டை மரபணு மாற்றமடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என இங்கிலாந்தின் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தொழிலாளர் கட்சியின் செயலாளர் ஸ்டீவ் ரீட் கூறுகையில் "அவர் இந்தியாவுக்கு பயணிப்பதை விட காணொலிக் காட்சி மூலமாக அதைச் செய்யலாம்" என கூறினார்.

பிரித்தானியாவில் இடம்பெறக்கூடிய உள்ளூராட்சி தேர்தல்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக பாக
கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய
கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந
அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கத் தடைகள் ந
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு மாதத்தை கடந்தது
கடும் கொரோனாவைரஸ் முடக்கல் நிலைமைக்கு மத்தியில் சீன ம
உக்ரைனின் தலைநகரான கிய்வ் பகுதியிலுள்ள ஒரு பள்ளியை ரஷ
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகளில் ஆக்ஸ்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா நோய்த்தொற
தாங்கள் போருக்கு அனுப்பப்படுவது தங்களுக்கே தெரியாது
ஈரான் கடற்படைக்கு சொந்தமான மிகப்பெரிய போர்க்கப்பல் ஒ
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணம் எல்பாசோ என்ற இடத்
