கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் 6 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். அடுத்த சில நிமிடங்களில், டெல்லியில் உள்ள மதுக்கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது.
கடைகளுக்கு முன்பு நீண்ட வரிசை காணப்பட்டது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் மணிக்கணக்கில் காத்திருந்து மது பாட்டில்களை வாங்கினர்.
ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு எண்ணற்ற பாட்டில்களை வாங்கினர். தெற்கு டெல்லியில் ஒரு மதுக்கடையில் நின்றிருந்த ரவீந்தர் சக்சேனா என்பவர் 8 பாட்டில்கள் வாங்கப்போவதாக கூறினார்.
வரிசையில் காத்திருந்தபோது சிலர் வரிசையை மீறி முன்னால் செல்ல முயன்றதால் வாக்குவாதமும் ஏற்பட்டது. 6 நாட்களுக்கு ஊரடங்கு என்று அறிவித்தாலும், அது நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதால், மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்வது நல்லது என்று மது பிரியர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ஊரடங்கின்போது, கள்ளச்சந்தையில் இருமடங்கு விலை கொடுத்து மது வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக சிலர் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
இதற்கிடையே, மதுபான நிறுவனங்களின் சங்கம், மராட்டியத்தை போல் டெல்லியிலும் மதுவை வீடுகளுக்கு நேரில் சென்று வினியோகிக்குமாறு வலியுறுத்தி உள்ளது.
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்
மேலும் சென்னையில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அ
சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் இடம்ப
கொரோனாவின் எதிரொலியாக உலகம் முழுவதும் வறுமை அதிகரித்
சென்னை கொடுங்கையூரில், கடந்த 14-ந் தேதி, வியாசர்பாடியை ச
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் , அரசுமுறைப் பயண
ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந
9 மாவட்டங்களுக்கான ஊரக
டெல்லியில் இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்க தமிழகத்தை உலுக்கிய புதுக்கோட்டை சிறுமி துஷ்பிரயோகம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலைய பிரதமர் நரேந்திர மோடியால் சீனாவிற்கு எதிராக நிற்க முட கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்கும் வகையில் புதுச்சேர இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலம
