யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 145 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
பரிசோதனை முடிவுகளில் 25 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “திருநெல்வேலி சந்தை வர்த்தகர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 21 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.
கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விடுதியில் சிகிச்சைப் பெற்ற நோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
கொலை செய்து சடலத்தைக் கூரையில் தொங்க விடுவதாக மிரட்டல
இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன எ
தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெரு
தமது வீட்டில் பணியாற்றி வந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வீதியோரத்தில் இருந்த
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மட்டக்
இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட ஒக்ஸ
அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை
விடுதலைபுலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களால் த
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்தொழில் ஈடுபட்டிந்தபோத
தொழில் நிமித்தம் சீஷெல்ஸ் (seashells) நாட்டிற்கு சென்று, கொரோ
ஹஜ் பெருநாளை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வ
அமைச்சர் உதய கம்மன்பில நம்பிக்கையில்லா பிரேரணையை எதி
