கொரோனா தொற்று பாதிப்பால் மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 600-க்கும் கூடுதலான முக்கிய மருத்துவ சாதனங்கள் அனுப்பி வைக்கப்படும் என இங்கிலாந்து நாட்டு தூதரகம் நேற்று அறிவித்துள்ளது. இவற்றில் வென்ட்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் வழங்கும் உபகரணங்கள் உள்ளிட்டவையும் அடங்கும்.
இந்த மருத்துவ உபகரணங்கள் இங்கிலாந்தில் இருந்து உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவை வரும் செவ்வாய்க்கிழமை காலை புதுடெல்லி வந்தடையும். அதன்பின், மற்ற உபகரணங்கள் வார இறுதிக்குள் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் ஆக்சிஜன் உபகரணம், வளிமண்டலத்தில் உள்ள காற்றில் இருந்து ஆக்சிஜனை பிரித்து இழுத்து நோயாளிகளுக்கு வழங்க வகை செய்யும். இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறையான மருத்துவமனைகள் அவற்றை உபயோகப்படுத்தி கொள்ள முடியும்.
இந்த உதவியானது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முக்கிய மருத்துவ சிகிச்சை வழங்க இந்திய அரசால் பயன்படுத்தப்படும். மத்திய அரசுடன் இணைந்து இங்கிலாந்து பணியாற்றி வருகிறது. இதனால் வரும் நாட்களில் கூடுதலாக என்ன உதவிகளை செய்ய முடியும் என்று அடையாளம் கண்டு அதற்கேற்ப செயல்படும் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஆஸ்திரேலியாவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம
உலகின் மிகப்பெரிய ஏவுகணை சோதனை என உலக நாடுகளை நம்ப வைத
இங்கிலாந்து இந்தியாவின் நெருங்கிய வர்த்தக கூட்டாளிய
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக
கார்கிவை பாதுகாக்கும் உக்ரேனிய துருப்புக்கள் ரஷ்யா எ
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், மஜு வர்க்கீஸ். இவர், அம
நேட்டோவுடன் இணைவதற்கு தான் விரும்பவில்லையென உக்ரைன்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
அமெரிக்காவில் கடந்த வருடம் கறுப்பினத்தவரான ஜோர்ஸ்
சில ஆண்களுக்கு மனைவியை வைத்து சமாளிப்பது பெரிய சவாலாக
உக்ரைனில் நடந்த சண்டையின் போது பிரான்ஸ் நாட்டவர் ஒருவ
உக்ரைனிலிருந்து சுவிட்சர்லாந்து வந்துள்ள அகதிகளுக்க
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் உள்ளவர்களை அழிக
