நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாத் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கொழும்பு –பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன் அவரது சகோதரர் ரியாத் பதியுதீன் வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, அவர்கள் இருவரையும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதி பெறப்பட்டிருந்தது.
விசாரணைகளுக்காக வழங்கப்பட்ட காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், மீண்டும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவிட்ட நிலையில் இந்த
நாடாளுமன்றத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி.
வவுனியாவில் நேற்று 10பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்த
தனிப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அல்லது தன
நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையி
சாவகச்சேரியில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மற
நாட்டின் பொருளாதாரத்தில் மீட்சி ஏற்பட்டதன் பின்னர் வ
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு வெளிந
மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடலில் நண்பர்களுடன் க
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இன்று (27) பிற்பகல் மலசலகூட க
இந்திய தேசம் இலங்கை விவகாரத்தில் காத்திருந்து உரிய நே
உலகில் பெண்களின் உரிமைகளுக்காக ஒரு தினம் கொண்டாடப் பட
மாதாந்தம் 5,000 ரஷ்ய பார்வையாளர்களை ஈர்க்க இலங்கை திட்டம
ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார்
இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை ச
