2021ஆம் ஆண்டிற்கான தேசிய வெசாக் பண்டிகையை கொண்டாடுவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் இன்று (27.4.2021) காலை நயினாதீவு ராஜமகா விகாரையில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பீ.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும் வணக்கத்திற்குரிய விகாராதிபதி நவதகலபதுமகீர்த்தி தேரர் அவர்களும் வெசாக் பண்டிகை நடாத்துவது தொடர்பான முன்னேற்பாடுகள், ஒழுங்கமைப்புகள் தொடர்பாக கலந்துரையாடினர்.
இந் நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர், மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் வேலனை பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கடந்த சில வாரங்களாக தேசிய மற்றும் மாகாண ரீதியில் நடைபெற்ற தேசிய வெசாக் பண்டிகைக்கான கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் முன்னேற்பாட்டு வேலைகள் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்ட வேலைகளின் கள நிலவரத்தை ஆய்வு செய்த கௌரவ ஆளுநர் அவர்கள், தலைமை விகாராதிபதியை சந்தித்து மேலதிக ஏற்பாடுகள் தொடர்பிலும் கலந்தாலோசித்தார்.


திரிபோஷாவில் விசத்தன்மை உள்ளதாக கூறப்பட்டமை தொடர்பா
சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புத
சிறுவர்களிடையே மீண்டும் கை, கால் மற்றும் வாய்களில் தொ
இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமு
நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இ
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூச
கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்தி
இன-மத உணர்வை தூண்டி ஆட்சி செய்ததன் விளைவே இலங்கையில் த
இலங்கையில் மிகவேகமாக பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தொற்று
கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர்ந்த ஏனைய மரக்கற
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்திய
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந
ஜப்பானில் தடுப்புக் காவலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ண
பெல்மடுல்ல பிரதேசத்தில் உள்ள கிரிதிஎல அணைக்கட்டில் இ
மின்கட்டணம் செலுத்தாமையால் இன்று (24) குடிவரவு குடியகல்
