அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாடாளுமன்ற வன்முறை தொடங்குவதற்கு முன்பும் வன்முறை நடந்து கொண்டிருந்தபோதும் டிரம்ப் சமூக வலைதளங்களில் தேர்தல் முறைகேடு தொடர்பாக பல்வேறு பதிவுகளை வெளியிட்டார். இதனால் டிரம்ப் வன்முறையை தூண்டியதாகக் கூறி டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைத்தள நிறுவனங்கள் அனைத்தும் டிரம்பின் கணக்கை நிரந்தரமாக முடக்கின.
இந்த சூழலில் டிரம்ப் மிகவிரைவில் தனக்கென சொந்தமாக ஒரு தளத்தை அமைத்து சமூக ஊடகத்துக்கு திரும்புவார் என அவரது ஆலோசகர் ஜாசேன் மில்லர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தார்.அதன்படி டிரம்ப் தற்போது புதிதாக தகவல் தொடர்பு வலைதளம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த வலைத்தளத்தில் உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் டிரம்பின் பதிவுகளுக்கு ‘லைக்' செய்வது மற்றும் கருத்து தெரிவிப்பதோடு அவற்றை டுவிட்டர் பேஸ்புக் உள்ளிட்டவற்றிலும் பகிர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் டிரம்பின் ஆலோசகர் ஜாசேன் மில்லர் முன்னர் கூறியதுபோல இது ஒரு சமூக வலைத்தளம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பெண்கள் தினம் நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களுக்கும் இடை
உக்ரைன் எல்லையில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட படைகளை ரஷ
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச
ரஷ்யா-உக்ரைன் போர் மூண்டால் உலக நாடுகள் கடும் விளைவுக
பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் அமெரிக்கா, சீனா இடையே உ
ஆப்கானிஸ்தானின் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஏ
உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்
இலங்கை மத்திய வங்கி நேற்றுமுன்தினம் 2,227 கோடி ரூபா பண
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய அதன் படைகளை குவிப்பதாக பிரித்த
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போர
சீனாவின் மத்திய மாகாணமான ஹெனானில் பெய்து வரும் கனமழைய
உக்ரைனில் மக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகள் மீது ரஷ்யப்
அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கத் தடைகள் ந
