ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்தின் தலைநகர் புல் இ ஆலமில் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. புனித ரமலான் மாதத்தினை ஒட்டி நேற்று மாலை முஸ்லிம் மக்கள் நோன்பு துறந்தனர்.
இதன்பின்னர் 6.50 மணியளவில் மருத்துவமனைக்கு வெளியே திடீரென கார் வெடிகுண்டு தாக்குதல் ஒன்று நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி 30 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 70 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மருத்துவமனை கட்டிடம் மற்றும் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சுகள் ஆகியவை பலத்த சேதமடைந்தன. மருத்துவ துறையை சார்ந்த பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களில் பலர் பல்கலைக்கழக நுழைவு தேர்வு எழுதி விட்டு, நோன்பு துறப்பதற்காக மருத்துவமனையை சுற்றியிருந்த சிறிய உணவு விடுதிகளில் சாப்பிடச் சென்றவர்கள்.
இதையடுத்து அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்சுகள் சம்பவ பகுதிக்கு வரவழைக்கப்பட்டன. பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலத்திற்கு அடியில் ம
ஜப்பான் நாட்டில் நேற்று 7.3 ரிக்டர் அளவுகோலில் பயங்கர ந
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரில் மனித உரி
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாண்டோங் மாகாணத்தில்
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக, சீனா தனியாக
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95), கடந்த வாரம் வழக்
ரஷியா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுற
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியை விடுதலை செ
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில்
உலக அளவில் கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வ
இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற
துனிசியாவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சென்ற புலம்
சீனா தனது அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் ஈடுபட்
