மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த வியாழக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி தலைநகர் கின்ஷாசாவில் உள்ள மிகப்பெரிய மைதானம் ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது இந்த நிகழ்ச்சிக்கு யார் தலைமை தாங்கி வழி நடத்துவது என்பது தொடர்பாக முஸ்லிம்களின் இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இது பெரும் கலவரமாக வெடித்தது.கலவரத்தை தடுக்க முயன்ற போலீசார் மீது இரு தரப்பினரும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். போலீஸ் வாகனங்களை தீவைத்து எரித்தனர். இதில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார். மேலும் பல போலீசார் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கலவரம் தொடர்பாக 31 பேர் கைது செய்யப்பட்டனர்.இது தொடர்பான வழக்கு ஒரே நாளில் விசாரித்து முடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இந்த வழக்கில் நீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார்.
அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 31 பேரில் 29 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மற்ற இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். காங்கோ நாட்டில் 2003-ம் ஆண்டு முதல் மரண தண்டனைக்கு தடை இருப்பதால், மரண தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகள் அதற்கு பதிலாக ஆயுள் தண்டனையை அனுபவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் தாக்குதல் ஒரு மாத
ரஷ்யா - உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போரில் ரஷ்யாவின் உயர
உலகளவில் செவி திறன் பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டு
பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூலை 19-ல்
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா க
சீன கம்யூனிஸ்டு கட்சியின் 100-வது ஆண்டு விழா இன்று கொண்ட
கொழும்பில் கலவரம் வெடித்துள்ள நிலையில் சற்று முன்ன
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக ஐ.எஸ்.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது ந
பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரி
டொமினிக்கன் குடியரசில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 150-வது நாளை நெருங்க
பெகாசஸ் மூலம் தலைவர்களின் செல்போன் ஒட்டு கேட்கப்பட்ட
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க
