ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 857 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்து 221 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று மட்டும் 485 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதனால் ஓமனில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 93 சதவீதமாக இருந்து வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் 9 பேர் பலியானார்கள். இதனால் ஓமனில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 274 ஆக அதிகரித்தது. கொரோனால் பாதிக்கப்பட்ட 237 பேர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்த
பொலிஸ் காவலில் இருந்தபோது பெண் ஒருவர் உயிரிழந்ததைத் த
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைட
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம
புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கடந்
சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பம், 3 பேரின் உயி
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங
உலகின் மிகப் பெரிய விமானமான Antonov An-225 விமானம் ரஷ்ய தாக்குத
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் அரசுமுறை பயணமாக
உக்ரைனில் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி (Volodymyr Selensky)தலைமைய
எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை ஆதரிக்கும் எத
நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல
தாய்வானில் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள்
உக்ரைனில் இடம்பெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் ப
