கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் அதிபர் யோவேரி முசவேனி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவரது மந்திரிசபையில் தொழில் மற்றும் போக்குவரத்து துறை மந்திரியாக இருந்து வருபவர் கட்டும்பா வாமலா.
முன்னாள் ராணுவ தளபதியான இவர் கடந்த 2019-ம் ஆண்டு மந்திரியாக பொறுப்பேற்றார்.இந்த நிலையில் 64 வயதான மந்திரி கட்டும்பா வாமலா நேற்று தலைநகர் கம்பாலாவில் உள்ள புறநகர் பகுதியில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரில் அவரது இளம்வயது மகள் நாந்தோங்கோ உடன் இருந்தார்.
அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் மர்ம நபர்கள் சிலர் மந்திரி கட்டும்பா வாமலாவின் கார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் அவரது மகள் நாந்தோங்கோ மற்றும் கார் டிரைவர் ஆகியோரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதில் அவர்கள் இருவரும் காருக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர். அதே சமயம் மந்திரி கட்டும்பா வாமலா காயங்களுடன் உயிர் தப்பினார்.
அவர் தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
உகாண்டாவில் மந்திரியை கொலை செய்ய நடந்த சதியில் அவரது இளம்வயது மகள் கொல்லப்பட்டது நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் 2 இடங்களுக்கும், க
உக்ரைன்- ரஷ்ய போரின் முதல் மூன்று மாதங்களில், சோவியத
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஏற்கனவே ஆரம்பித
உக்ரைனுக்குள் ஊடுருவியுள்ள ரஷ்ய வீரர்கள் சிலர், வயது
சிங்கப்பூரின் புவாங்கொக் கிரசன்ட் பகுதியில் வாளால் த
இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள
எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து அந்த நாட்டின் வடக்
அமேசான் நிறுவனர்
லிஸ் ட்ரஸ், உயர்மட்ட வருமான வரி வீததத்தை குறைப்பதற்கா உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் போரில் உலக குத்துசண்டை வீ ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிடையே கடுமையான போர் இடம்ப மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் கிழக்க உக்ரைன் மீதான போரை ரஷியா கைவிட வேண்டும் என்று போப் ப 450 இடங்களைக் கொண்ட ரஷ்யா பாராளுமன்றத்துக்கு கடந்த 17-ம் வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நா
