பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி தனது மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். பின்னர் தொழிலாளியின் உடலை, அவரது குடும்பத்தினர் இறுதி சடங்கு செய்து தகனம் செய்ய முடிவு செய்தார்கள். இதையடுத்து, ஆஸ்பத்திரியில் இருந்து ஹெப்பால் மின்மயானத்திற்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தொழிலாளியின் உடலை, அவரது மனைவி கொண்டு சென்றார். மின்மயானம் அருகே வைத்து ரூ.10 ஆயிரம் வாடகை கொடுக்க வேண்டும் என்று டிரைவர் கேட்டுள்ளார்.
ஆனால் தன்னிடம். ரூ.3 ஆயிரம் இருப்பதாகவும், மீதி பணத்தை யாரிடமாவது வாங்கி கொடுப்பதாகவும் தொழிலாளியின் மனைவி கூறியுள்ளார். இதனை ஏற்க ஆம்புலன்ஸ் டிரைவர் மறுத்ததுடன், தனக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தொழிலாளியின் உடலை மயானம் அருகே உள்ள நடைபாதையில் வைத்துவிட்டு டிரைவர் சென்றுவிட்டார். இதுபற்றி மயானம் அருகே இருந்தவர்களிடம் அந்த பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக யாரும் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை என்று அம்ருததஹள்ளி போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகை
தமிழகத்தில்
2 தவணை
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக கொரோனா அச்சுறுத்தலால் அரசியல் கட்சியினர் பிரசாரம் மே அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அப்போதைய மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்ச நோய் மருத்துவ கோவிஷீல்டு தடுப்பூசியில் உள்ள மூலப்பொருள்களால் கடும 75-வது சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டம் எர்பைய சித்தூர் மாவட்டம், ராமச்சந்திரபுரம் அடுத்த சி.ராமபுரம தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு கு
