உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. அங்கு தினந்தோறும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள ஆஸ்பத்திரிகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
இந்தநிலையில் அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜெர்ஜிபே மாகாணத்தின் அரகாஜு நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மாலை இந்த ஆஸ்பத்திரியில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்து விட்டு எரிந்த தீ கண்ணிமைக்கும் நேரத்தில் ஆஸ்பத்திரி முழுவதும் பரவியது.இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது.
ஆஸ்பத்திரி ஊழியர்கள் அனைவரும் நோயாளிகளை அவசர அவசரமாக வெளியேறினர்.இதனிடையே இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி கொரோனா நோயாளிகள் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
உலகில் மிகவும் தேடப்படும் தீவிரவாதி ஹக்கானி நெட்வொர்
உக்ரைன் அருகே உள்ள ரஷ்ய இராணுவத்தின் பெல்கொரோட் பயிற்
உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு வாரமும் உலக அளவில் கொரோனா
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தல
அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
பிரேசில் நாட்டின் அதிபராக 2019 ஜனவரி 1-ந் தேதி முதல் பதவி வ
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் தாக்குதல் ஒரு மாத
சிரியா நாட்டில் பல ஆண்டுகளாக உள் நாட்டு போர் நடந்து வர
அமெரிக்காவின் டெக்சாஸ் மஞத்தை சேர்ந்த சாண்ட்ரா வில
அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ்.
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்ற
