இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேசமயம் குணமடைவோரின் எண்ணிக்கை உயர்கிறது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,89,96,473 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 2123 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,51,309 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,73,41,462 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,82,282 பேர் குணமடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்...தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் -பிரதமர் மோடி அறிவிப்பு
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 13,03,702 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 23,61,98,726 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணி
சென்னையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தேர்த
பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில் கர்தார்பூர் என்ற இட
இந்திய விமானப் படைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 83 த
திருப்பதி அருகே உள்ள புங்கனூர் அலிபிரி சாலையை சேர்ந்த
ஒரு துணைவேந்தரை நியமிக்க வேண்டுமானால் உயர்கல்வித்து
தமிழக முதல்வர்
டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன் என்று மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டச தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தின் தபோவன் பக தமிழக விளையாட்டு வீரர்கள் 15 பேருக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்த சென்னை ரைஃபிள் கிளப் நடத்திய 46- வது மாநில அளவிலான துப்ப கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான திரவ மருத்து
