தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள கொரோனா சிகிச்சை வார்டில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.50 லட்சம் செலவில் லிப்ட் வசதி அமைக்கும் பணிகளை கனிமொழி எம்.பி. நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கருப்பு பூஞ்சை தொற்று அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. நாட்டில் பல மாநிலங்களில் போதுமான மருந்துகள் இல்லாததால் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள மக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். ஆனால் மத்திய அரசு போதிய அளவிலான மருந்துகளை மாநிலங்களுக்கு அனுப்பவில்லை என்பது தான் உண்மை.
இந்த மருந்தை வெளிநாடுகளில் இருந்து வாங்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாக சொல்கிறார்கள். மாவட்டங்களுக்கு போதுமான மருந்துகள் வந்து சேரவில்லை. எனவே மத்திய அரசு உடனடியாக இந்த மருந்தை உள்நாட்டில் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது வெளிநாடுகளில் இருந்து வாங்கி மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள பல ஆஸ்பத்திரிகள் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கான மருந்துகள் இல்லை. இருப்பினும் அரசு ஆஸ்பத்திரிகளில் மாற்று மருந்துகள் மூலம் இந்த நோயை குணப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் மற்றும் டாக்டர்கள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி முனுசா
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்க
மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர்ப் பகுதிகளில் கர்நாடக காங்கிரஸ் தலைவராக ஆர்.வி.தேஷ்பாண்டே இருந்த போ சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டண ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளாராக அற கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங் இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் மருத்துவ சிக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ர வங்க கடலின் கிழக்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வ கரூர் மாவட்டத்தில் ஆயிரத்து 72 அரசு மற்றும் தனியார் பள் கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒர
