தமிழில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வக்கீல் சாப் படம் வந்தது. தற்போது தமிழில் பூச்சாண்டி மற்றும் தெலுங்கில் 2 படங்கள் கன்னடத்தில் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார்.
அஞ்சலிக்கு 34 வயது ஆகிறது. ஏற்கனவே நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் பேசினர். அஞ்சலி அளித்த பேட்டியொன்றில் நான் காதலித்தது உண்மைதான். ஆனால் அந்த காதல் நிறைவேறவில்லை. தோல்வியில் முடிந்து விட்டது என்றார். காதலித்தவர் பெயரை வெளிப்படுத்தவில்லை.
இந்நிலையில், அஞ்சலிக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும், விரைவில் அவரது திருமணம் ஐதராபாத்தில் நடக்க உள்ளதாகவும் புதிய தகவல் தெலுங்கு பட உலகில் பரவி வருகிறது. திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக அவர் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அஞ்சலி தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை.
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்க
சமீபத்தில் தமிழகமெங்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற
ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்படம் ‘பாரஸ்ட் கம்ப்’.
இந்திய அளவில் முன்னணி
கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன
ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் ஷோ
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், வி
தமிழ் சினிமாவில் 90களில் இருந்த முன்னணி நடிகர்களுடன் இ
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வல
இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ம
நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமா கொண்டாடும் மிக முக்கியம
நடிகை சமந்தா எப்போதும் உடற்பயிற்சிக்கு அதிகம் முக்கி
சமீபத்தில் திரையுலகை அதிர்ச்சியாக்கி விஷயம், நடிகர் த
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக
