இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தமது உறவுகளைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தை ‘சூம்’ தொழில் நுட்பத்தின் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் மறுவாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த ஊடகங்களிடம் தெரிவித்தார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் முதல் கட்டமாக, இந்தத் திட்டம் வெலிக்கடை, அங்குனகொலபெலஸ்ஸ, பூஸா உள்ளிட்ட 6 சிறைச்சாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் அவர் கூறினார்.
கைதிகள் மத்தியில் கொரோனாத் தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டமானது, எதிர்காலத்தில் ஏனைய சிறைச்சாலைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த குறிப்பிட்டார்.
கைதிகளின் சிறை இலக்கம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் நேரத்தில் ‘சூம்’ தொழில்நுட்பத்தின் மூலம் அவர்கள் தமது உறவுகள் மற்றும் நண்பர்களுடன் பேச முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.
எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கும் தற்போதைய அரசாங்கமே
இந்த வருடத்தின் முதலிரண்டு வாரங்களில் 39,172 சுற்றுலாப் ப
புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிறுமி
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து
வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஆண் ஒருவர் மர தமிழ் தேசிய இனத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பெருந்தோ கொழும்பில் நில மதிப்புகள் 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி யாழ். மாவட்டத்தில் நாளை (08) முதல் தேநீர், பால் தேநீர், ப பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை ஒழுங்காக பின்பற்றா நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட த அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை விசேட ப சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும யாழ்ப்பாணம், திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை தனித்து அபி
