வளைகுடா நாடான குவைத்தின் வெளியுறவுத்துறை மந்திரி ஷேக் அகமது நாசர் அல்முகமது அல்சபா, கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்கு வந்தார். அவரது அழைப்பின்பேரில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று காலை குவைத் சென்றார்.
இது, குவைத்துக்கான அவரது முதலாவது இருதரப்பு பயணம் ஆகும். விமான நிலையத்தில் அவரை உதவி வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் ரசாக் அல்கலீபா வரவேற்றார். இந்திய தூதர் சிபி ஜார்ஜ் மற்றும் இந்திய அதிகாரிகளும் வந்திருந்தனர்.
இந்நிலையில், குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் அமைக்கப்பட்டு உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இத்தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, குவைத் பிரதமர் ஷேக் சபா காலித் அல்ஹமாத் அல்சபாவை ஜெய்சங்கர் சந்தித்தார். இந்தியா-குவைத் இடையிலான தூதரக உறவின் 60-வது ஆண்டு நிறைவையொட்டி பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இருநாட்டு உறவை உயர்மட்டத்துக்கு கொண்டு செல்லும் உறுதிப்பாட்டுக்காக ஜெய்சங்கர் பாராட்டு தெரிவித்தார்.

நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் உ
விண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எ
நைஜீரியாவில் ஒரு தசாப்தத்தில் காணப்படாத மிக மோசமான வெ
அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே எல்லைப் பகுதியில் கட
தனது திருமண நிகழ்விற்கு தாமதமாக சென்ற மணப்பெண் ஒருவர்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பேஸ்புக் டுவ
கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால
தங்கள் சொந்த நாட்டு இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக உக
இலங்கையில் நேற்று இடம்பெற்ற வன்முறையை குறித்து ஐக்கி
வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்ப
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் அதிபர
இஸ்ரேல் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள டெல் அவி
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இன்ஜினிட்டி என்ற சிறிய
அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநா
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இரா
