ஜி7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு, பிரிட்டனின் கார்ன்வால் நகரில் நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்வில் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தும் கலந்து கொண்டார். அவருடன் இளவரசர் சார்ல்ஸ், அவரது மனைவி கெமில்லா மற்றும் பேரன் வில்லியம் ஆகியோரும் கலந்து கொண்டனர். ராணி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப் அண்மையில் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு, குடும்பத்துடன் இங்கிலாந்து ராணி கலந்து கொள்ளும் முதல் நிகழ்வு இதுவாகும்.
இந்த நிகழ்வின் போது, ஜி 7 கூட்டமைப்பின் தலைவர்கள், ராணியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். புகைப்படம் எடுக்கையில், ராணி 2ம் எலிசபெத் நகைச்சுவையாகப் பேசி, அனைத்துத் தலைவர்களையும் சிரிக்க வைத்து மகிழ்ந்தார்.
மாநாட்டிற்கிடையில், ராணி 2ம் எலிசபெத் கேக் வெட்டும் நிகழ்வும் நடைபெற்றது. அதில் சிறப்பம்சமாக ராணி வாள் கொண்டு கேக் வெட்டியது அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது. ராணி வாளால் கேக் வெட்டும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ராணி கேக் வெட்டிய நிகழ்வானது, அவரது பிறந்த நாளை நினைவுபடுத்தியது. அவரது உண்மையான பிறந்த நாள் ஏப்ரல் 21 ஆகும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவரது கணவர் இளவரசர் பிலிப் மறைந்ததால், ராணியின் பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடப்படவில்லை.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இஸ்ரேல் 34வ
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அர
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கடந்த திங்கட்
இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளராக இருந
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட
உக்ரைன் புதிய, நீண்டகால போர் கட்டத்திற்குள் நுழைவதாக
தென்கொரிய ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தின் போது
கொரோனாத் தொற்றின் நெருக்கடிக்கு மத்தியிலும் போர்த்த
பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவ
நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ
ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித
ஷாங்காய் கட்சியின் செயலாளரான லி கியாங் (வயது 63) சீனாவில
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும்
சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுப
ஜப்பானின் பட்டத்து இளவரசர் புமிஹிடோவின் மகளும், பேரரச
