ஜப்பானில் பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையிலான தாராளவாத ஜனநாயக கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜப்பான் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இன்றுடன் (புதன்கிழமை) முடிவடையும் இந்த கூட்டத்தொடரை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க எதிர்க்கட்சிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.
கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஆதரவு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும், டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் போது அவசர கால நடவடிக்கைகளை எடுக்கவும் நாடாளுமன்றம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
ஆனால் பிரதமர் யோஷிஹைட் சுகா பல்வேறு சிக்கல்களை விவாதிக்க கூட்டத்தொடரை நீட்டிப்பது பொருத்தமற்றது என கூறி எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஜப்பானின் முக்கிய எதிர்க்கட்சிகளான கம்யூனிஸ்டு, ஜனநாயக, அரசியலமைப்பு ஜனநாயக மற்றும் சமூக ஜனநாயக ஆகிய 4 கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமர் யோஷிஹைட் சுகா அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது விரைவில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் நாடாளுமன்றத்தில் தாராளவாத ஜனநாயக கட்சி பெரும்பான்மை வகிப்பதால் இந்த தீர்மானம் எளிதில் தோற்கடிக்கப்படும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மியான்மர் நாட்டில் ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈட
இந்தியாவின் பலத்தை பார்க்கும் பாகிஸ்தான் தனது அணு ஆயு
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்க
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான ராணுவ மற்றும் வெளி
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
காபூல் விமான நிலையத்தில் காத்துக் கிடந்த 107 இந்தியர்கள
உக்ரைனில் போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அங்கு சிக்
சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலருக்கும் வாழ்நாள்
துபாயில் லண்டன் நகரில் ஓடும் டாக்சிகள் போல் புதிதாக அ
ரஷ்யாவின் ஊடக ஒழுங்குமுறை நிறுவனம் அந்நாட்டில் பேஸ்ப
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வ
உலகளாவிய ரீதியில் தண்ணீர் நெருக்கடி அதிகரித்தல் மற்ற
இந்தியாவில் சமூக ஊடகங்கள் மற்றும் ஓ.டி.டி., தளங்களுக்கு
