சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது.
இந்தியாவில் அந்த வகையில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன. முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.1’ வைரசுக்கு காப்பா என்றும், ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என்றும் உலக சுகாதார நிறுவனத்தால் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த டெல்டா வைரஸ்தான் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, இந்த டெல்டா வைரஸ் தற்போது உருமாறி உள்ளது. உருமாறிய டெல்டா வைரஸ் டெல்டா-பிளஸ் என அழைக்கப்படுகிறது.
இந்தப் புதிய உருமாறிய வைரஸ், கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தில் ‘கே417என்’ பிறழ்வால் வகைப்படுத்தப்படுகிறது. இந்தியா உள்பட 9 நாடுகளில் டெல்டா பிளஸ் கொரோனா பரவியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 22 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், டெல்டா பிளஸ் கொரோனா கவலை தரக்கூடியது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வகைப்படுத்தியுள்ளது.
மேலும், டெல்டா பிளஸ் கொரோனா பரவியுள்ள இடங்களில் போதுமான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, ஸ்டார் ஓட்டல்கள், ரி
இந்தியாவில் 18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாத
தலைநகர் டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகா
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தற்போதுதான் தணிய தொடங
கல்வி உரிமை தான் பெண்களின் உரிமை எனவும், பெண்கள் தன்னம
மக்கள் மத்தியில் தான் நடிக்க வேண்டிய அவசியமோ, தேவையோ இ
அடுத்த சில மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யக்
நாடு முழுவதும் பள்ளி பொதுத்தேர்வை எதிர்க்கொள்வது குற
தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,093 பேருக்கு
குஜராத் பிரிவை சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் அ காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சண்டை ந பள்ளி கல்வி பீகாரில் திருமணம் ஆகாத பெண்களுக்கான கல்வி உதவித் தொகை தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து <
