பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் கடந்த ஏழு ஆண்டுகளில் ரூ. 100 கோடியை உணவுக்காக மட்டுமே செலவிட்டதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவல் பெறப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த தொகை அரசு கஜானாவில் இருந்தே எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட இணைய தேடல்களில் வைரல் தகவல்களை உறுதிப்படுத்தும் செய்தி குறிப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. பொதுவாக பிரதமர் மோடி குறித்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் பெரும்பாலான செய்திகளில் பரவலாக வெளியாகும்.
பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் வைரல் தகவல்களை நிரூபிக்கும் பதிவுகள் எதுவும் இடம்பெறவில்லை. பொதுவாக பிரதமர் மோடி குறித்த தகவல் அறியும் உரிமை சட்ட விளக்கங்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் செலவீனங்கள் குறித்த கேள்விக்கான பதில் மட்டுமே இடம்பெற்று இருக்கிறது.
இதில் பிரதமர் மோடி தனது உணவுக்கான செலவை தானே ஏற்றுக் கொள்வதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதனால் இவரின் உணவு செலவீனங்கள் அரசு கணக்கில் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி உணவுக்காக ரூ. 100 கோடி செலவிடவில்லை என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனு
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான விஐபி தொகுதிகளுள் ஒன்ற
இந்தியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள உத்தரபிரத
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதம
நெல்லை மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் கலைச்ச
சேலத்தை சேர்ந்த கோவிந்தராஜ், டாக்டர் ராஜசேகர், நாமக்க
முதல்-அமைச்சர்
பான் எண்ணை (நிரந்தர கணக்கு எண்) ஆதார் எண்ணுடன் இணைப்பதற பாகிஸ்தானின் 23-வது பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-ந தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை எதிர்பாராத விதமாக ஒருவர கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ மும்பையில் இருந்து கோவாவிற்கு சென்ற சொகுசு கப்பலில் ப மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை நாயகனுமான
தமிழ் சினிமா
சிறப்பானவை

![]()
Sri Lanka
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45
World
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45