தமிழில் அவன் இவன், தெகிடி, அதே கண்கள், தர்மபிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஜனனி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் கைவசம் தற்போது யாக்கை திரி, பகீரா, முன்னறிவான், கசட தபற போன்ற படங்கள் உள்ளன.
மீண்டும் பணிக்கு திரும்பியது குறித்து நடிகை ஜனனி கூறியதாவது: “கொரோனா 2-வது அலை எல்லோரையும் அதிகமாக பயமுறுத்தி உள்ளது. எனக்கு தெரிந்த பலர் இந்த கொரோனா தொற்றுக்கு இறந்துள்ளனர். எல்லாமே மாறிவிட்டது. இப்போது மீண்டும் படவேலைகளில் ஈடுபட்டு இருக்கிறேன்.
இது சந்தோஷத்தை கொடுத்தாலும் இன்னொரு புறம் பயமாகவும் இருக்கிறது. ஆனாலும் எப்போதும் வீட்டிலேயே முடங்கி இருக்க முடியாது. நான் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன். இதனால் நம்பிக்கை வந்து இருக்கிறது. ஆனாலும் எச்சரிக்கையாகவே இருப்பேன்.
நான் நடித்துள்ள இரண்டு படங்களுக்கான டப்பிங்கை கொரோனா பரவல் அதிகமானதால் தொடர முடியாமல் நிறுத்த வேண்டி வந்தது. இப்போது தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் ஸ்டுடியோவுக்கு செல்லும் அளவு நம்பிக்கை வந்திருக்கிறது” என்றார்.

வாரிசுகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கமல்ஹாசன்
நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக ப
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்
தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகைய
கடந்த மாதம் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்த
ஆர்.பி சௌத்ரியின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிம
கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், அடுத்ததாக
ரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர். இவர் தமிழில் தனுஷ் ஜோடி
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில், கொடிக்கட்டி பறந
தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வருபவர்
67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல
தமிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெ
முன்னணி நடிகையான சுஹாசினி பிறந்தநாள் கொண்டாடிய புகைப
நடிகை சமந்தா விவாகரத்து குறித்து தனது இன்ஸ்டாகிராமில
இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த திரைப்படத்தில் முன
