கடந்த ஆண்டு ஜூலை மாதம் நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்) விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இதில், முக்கியமான திருத்தங்களை சேர்ப்பது தொடர்பாக ஜூலை 6-ந் தேதி வரை பொதுமக்களின் கருத்துகளை மத்திய அரசு கேட்டுள்ளது.
ஆன்லைன் வணிக நிறுவனங்களின் மோசடியான தள்ளுபடி விற்பனைக்கு தடை விதிப்பது, தலைமை குறைதீர்ப்பு அதிகாரியை நியமிப்பது உள்ளிட்ட திருத்தங்கள் சேர்க்கப்பட உள்ளன.
இதனால், ஆன்லைன் வணிக நிறுவனங்கள் ‘பிளாஷ் சேல்’ என்ற பெயரில் நடத்தும் அதிரடி தள்ளுபடி விற்பனைக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகார அமைச்சக கூடுதல் செயலாளர் நித்தி காரே கூறியதாவது
அதிரடி தள்ளுபடி விற்பனையை நாங்கள் எதிர்க்கவில்லை. இத்தகைய போட்டி இருந்தால்தான், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும். எனவே, அதை நாங்கள் தடை செய்யவோ, ஒழுங்குபடுத்தவோ போவதில்லை. அதிரடி தள்ளுபடி விற்பனை குறித்த விவரங்களையும் கேட்க மாட்டோம்.
ஆனால், மோசடியான தள்ளுபடி விற்பனை நடந்தாலோ, பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தாலோ சட்டப்படி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். மோசடியான விற்பனை நடந்தால், புகார் தெரிவிக்கும் வசதி இருக்க வேண்டும் என்பதால்தான் இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. எனவே, ஆன்லைன் வணிக நிறுவனங்கள் பயப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அ
கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக்
டெல்லியில், ரேஷன் பொருட்களை வீடு தேடிச்சென்று வழங்கும
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போரூரில் பிரசாரத்தை
தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சி
தங்கத்தால் ஆன “தங்க கோவில்” என்றழைக்கப்படும் ஸ்ரீ
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் வரும் ஒக்ட
போலந்து நாட்டில் நடந்த உலக இளையோர் வில்வித்தை சாம்பிய
தமிழக சட்டசபை தேர்தலில்
ஐ.எஸ். நடவடிக்கைகள் மட்டுமின்றி, பாகிஸ்தானில் இயங்கும பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கா திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சோழ மாநகர இலங்கைக்கு இந்த ஆண்டுக்கான யால பருவத்திற்கு உரம் வழங் கேரள சுகாதாரத் துறை வெளியிட்ட செய்தியில், கடந்த 24 மணி ந25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத
