உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை கண்டறிய பல்வேறு பரிசோதனைகளை உலக நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இதற்கான பிரத்யேக கருவிகளும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் முககவசம் மூலமே கொரோனாவை கண்டறியும் வழிமுறை ஒன்றை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து வடிவமைத்து உள்ளன.
அந்தவகையில் கொரோனா வைரசை கண்டறியும் பிரத்யேக சென்சார் பொருத்தப்பட்ட முககவசங்களை இந்த நிறுவனங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் வடிவமைத்து உள்ளனர். இந்த முககவசம் அணிபவரின் மூச்சுக்காற்றை பரிசோதித்தே இந்த சென்சார்கள் தொற்றை உறுதி செய்து விடுகின்றன. அணிந்தவருக்கு தொற்று இருக்கிறதா? இல்லையா? என்ற முடிவை 90 நிமிடங்களில் இது வெளிப்படுத்துகிறது.
சிறிய மற்றும் எளிதில் அகற்றக்கூடிய இந்த சென்சார்களை மற்ற முகமூடிகளிலும் பொருத்த முடியும். இதைப்போல பிற வைரஸ்களை கண்டறியும் வகையிலும் இவற்றை மாற்றியமைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இது ஒரு முக்கிய மைல்கல் கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.
இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்கால
சீனாவில் தோன்றி உலக நாடுகளுக்கு பரவிய உயிர்கொல்லி கொர
அபுதாபி பகுதியில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த தடு
தலிபான்கள்
அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்க சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரி இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் அவசரகால நடவடிக்கைகளை மேலு கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவெல்னிக்கு மூன்ற உக்ரைனில் சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முதலாக க ஜெர்மனியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர் சவுதி அரேபியாவின் விமானநிலையம் மீது இடம்பெற்ற ஆளில்ல ஐ.நா.சபையின் 9-வது பொதுச்செயலாளராக போர்ச்சுக்கல் முன்ன
