இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக கிரீஸ் நாடு சென்றுள்ளார். நேற்று விமானம் மூலம் கிரீஸ் சென்றடைந்த அவர், அந்நாட்டின் வெளியுறவுத் துறை மந்திரி நிகோஸ் டெண்டியாஸை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெய்சங்கர் - நிகோஸ் டெண்டியாஸ் இடையில் நடந்த சந்திப்பில், இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினர்.
வர்த்தகம், முதலீடு, அறிவியல், தொழில்நுட்பம், கலாசாரம், கல்வி மற்றும் மக்கள் இணைப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு நல்குவது குறித்து இருவரும் ஆலோசித்தனர். இரு தரப்பு பிராந்தியங்களில் நிலவும் பிரச்னைகள் குறித்தும், உலக அளவில் நிலவும் சிக்கலான பிரச்னைகள் குறித்தும் கலந்துரையாடினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலையை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் நிகோஸ் டெண்டியாஸ் இருவரும் திறந்து வைத்தனர்.
இதுதொடர்பாக , தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், மகாத்மா காந்தியின் போதனைகள் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வங்காளதேசத்தில் அவாமி லீக் கட்சி தலைமையில் ஆட்சி நடக்
சீனாவில் பிறந்தவர் பெண் பத்திரிகையாளர் செங் லீ. இவர் க
சிலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்
அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்
ஆப்கானிஸ்தானில்
உக்ரைனுடனான போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இர உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் செம்மொழியான தமிழ் நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் உ சிறுநீர் தொற்று என்று சிகிச்சைக்கு வந்த பெண்ணின் சிறு உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ளது. ரஷியா உடனான இந தென் அமெரிக்க நாடான ஈக்குவாடோரின் – குயாக்வில் நகரி ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அணிதிரட்டல் உத்தரவுக உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால் பத துபாயில் வசித்து வருபவர் மனோஜ் சாமுவேல். இவரது மனைவி ச
