திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு நேற்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி. ஆகியோர் வந்தனர். பின்னர் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலை திருப்பதி கோவிலுக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும். இக்கோவிலில் விரைவில் குடமுழுக்கு நடத்த வேண்டும். அதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும். பக்தர்கள் தங்கும் விடுதிக்கான கட்டுமான பணியை விரைவுப்படுத்த வேண்டும். பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
பின்னர் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி. ஆகியோர் ராணிமகாராஜபுரம் பகுதியில் உள்ள திருச்செந்தூர் கோவிலுக்கு சொந்தமான 75 ஏக்கர் இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் நயினார்பத்து பகுதியில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தையும் பார்வையிட்டனர்.
முன்னதாக, தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
அவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர். பள்
தமிழகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப
துபாய் எக்ஸ்போவில் பங்கேற்க அரசு முறை பயணமாக சென்னையி
பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிற அசாம் மாநிலத்தில் வரும் 27-ந்
மதுபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண், கொ
கடந்த 2014-ம் ஆண்டு, பெங்களூரு-ஹாசுர் சாகிப் நான்தத் எக்ஸ
கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் காவிரி ஆற்றின் குறுக் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளக் கட்டுமான பொருட்களை ஏற் வேலை நிறுத்தம் மற்றும் விடுமுறைகள் காரணமாக கடந்த வாரத அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகியவற்றுக்கான தொகுதிப் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா, வ பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை, எல்லைப்பகுதிய கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அட
