நாட்டில் சீனா முன்னிற்பது தொடர்பாகக் கேள்வி எழுப்புபவர்கள், யாழ்ப்பாணத்தில் இந்தியா முன்னிற்பது குறித்து ஏன் கேட்பதில்லை? என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான நேற்றைய களப் பயணத்தின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சீன தொடர்பாக எதிர்க்கட்சியினருக்கே அதிக பிரச்சினை இருக்கின்றது. அரசுக்கு எந்த நாடு உதவி செய்தாலும், அதன் மூலம் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதே எமது எதிர்பார்ப்பு.
மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்தித் திட்டத்துக்கும் சீனா உதவ முன்வந்தால், நாம் அதனையும் பெற்றுக்கொள்ளவுள்ளோம்.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும்போது, விமான நிலையத்தின் தேவைப்பாடு அதிகம் இருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டம் சுற்றுலாத்துறைக்கு பிரசித்தி பெற்ற இடம். சுற்றுலாப் பயணிகள் நீண்ட காலம் தங்கியிருப்பதற்கான சூழலை அமைக்க வேண்டும்.
வடக்கின் வசந்தம், கிழக்கின் வசந்தம் போன்ற திட்டங்களைப் பஸில் ராஜபக்ச முன்னெடுத்தார். பஸில் ராஜபக்ஸ நாடாளுமன்றம் வருவது கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது” – என்றார்.
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்ப
தற்போது நாட்டில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தை ம
அரசாங்கம் பயங்கரவாதச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக மத்தி
வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த
மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக அரச தலைவர் ச
வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த சுமார் 30,000 இலங்கை
இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இ
குருணாகலில் குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது ம
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்க
வவுனியாவில் பொதுஜன பெரமுனவின் பேராளர் மாநாடு இன்றையத
வளர்முக நாடுகளின் பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் இலங
இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெ
நாள்தோறும் 16 மணித்தியாலங்கள் மின்தடை ஏற்படக்கூடிய அப
