அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்குமார், வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எத்தகைய முடிவை எடுப்பார் என்ற கேள்வி அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
20 ஐ ஆதரித்திருந்தாலும் ஆளுங்கட்சியில் இணைவது தொடர்பான அறிவிப்பை அரவிந்குமார் இன்னும் வெளியிடவில்லை. ஆளுந்தரப்பில் இருந்து அவருக்குப் பதவிகள் எதுவும் வழங்கப்படவும் இல்லை. எதிர்காலத்தில் வழங்கப்படுமா என்பது பற்றியும் எதுவும் அறிவிக்கப்படவும் இல்லை.
எனவே, எதிரணியில் இருந்து 20 இற்காக அரசுக்கு ஆதரவு வழங்கியதுபோல், நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போதும் அரவிந்குமார் . உதய கம்மன்பிலவை ஆதரித்து பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
குறிப்பாக வாக்கெடுப்பில் அவர் பங்கேற்காமல் இருந்தால்கூட, பிரேரணையை ஆதரித்து வாக்களிக்கும் நிலைப்பாட்டை எடுக்கவேமாட்டார் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேவேளை, இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்படாததாலும், மக்களின் பக்கம் நின்றும் பிரேரணைக்கு அரவிந்குமார் ஆதரவு வழங்கக்கூடும் எனவும் அவருக்கு நெருக்கமான சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை (14 -02-2022) வரை மின் விநிய
அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு வ
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொ
பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் இடம்பெற
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவ
யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் சிகிச்சைக்கு வந்த நோயாள
சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கும் புதுப
கிளிநொச்சி மாவட்டத்தின் 7ஆவது பொலிஸ் நிலையம் இன்று உத
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி எரிந்ததையடுத்து க
வவுனியாவில் வீதிகளில் முகக்கவசங்கள் அணியாமல் உரிய மு
எதிர்வரும் 21ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமது சிறப்புரிமை ம
இந்தியா - தமிழ்நாடு ,திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து
இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலை
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற
