கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ் (53), நேற்று முன்தினம் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த பயங்கர சம்பவத்தின்போது அவரது மனைவி மார்டின் மோயிஸ் படுகாயம் அடைந்தார்.
அவருக்கு அங்கு முதலில் முதலுதவி அளித்துவிட்டு, புளோரிடாவுக்கு ஆம்புலன்ஸ் விமானத்தில் எடுத்துச்சென்று அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பவம் அந்த நாட்டை உலுக்கி உள்ளது.
இந்த கொலையில் சந்தேக குற்றவாளிகள் என கருதப்படுகிற 4 பேரை அந்த நாட்டின் பாதுகாப்பு படையினர் அதிரடியாக சுட்டுக்கொன்றனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அதிபர் ஜோவனல் மோயிஸ் படுகொலை மற்றும் ஹைட்டியின் முதல் பெண்மணி மார்டின் மோயிஸ் மீதான தாக்குதல் குறித்து வருத்தம் அடைந்தேன். அதிபர் ஜோவனல் மோயிஸ்சாரின் குடும்பத்தாருக்கும் அந்நாட்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியின் அறையில் அ
பிரச்சாரத்தில் பழக்க தோஷத்தில் தங்க தமிழ்ச்செல்வம் இ
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்ந
கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களை சுகாதாரத் துறை அமை
மேற்கு வங்காள சட்டசபையில் கடந்த 2-ந் தேதி கவர்னர் ஜெகதீ
தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆக உத்தர பிரதேசத்தில் ஒன்றிய இணை அமைச்சர், மாநில துணை முத மணப்பாறை சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணக கொரோனா தடுப்பூசி பணி எப்போது முடிவடையும் என்று மக்களவ உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்துள்ள சிஜர்சி என்ற
