பாகிஸ்தானில் 65 பில்லியன் அளவில் முதலீடு செய்து சீனா பல்வேறு கட்டுமான பணிகளை செய்து வருகிறது. சீனா- பாகிஸ்தான் பொருளாதார காரிடார் என்ற பெயரில் சீனா முதலீடு செய்து, பாகிஸ்தானில் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக டசு அணையில் நீர்மின்திட்டம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சீனாவை சேர்ந்த தொழிலாளர்கள், பொறியாளர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர். உப்பேர் கோஹிஸ்தானில் நடைபெற்று வரும் இந்த பணிக்காக தொழிலாளர்கள் பேருந்தில் சென்று வருவார்கள்.
அவ்வாறு இன்று பேருந்தில் செல்லும்போது, திடீரென பஸ் வெடித்து சிதறி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சீனாவைச் சேர்ந்த 7 பொறியாளர்கள், 2 ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 39-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டதா? அல்லது பேருந்திற்குள் இருந்த பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்த தெளிவான தகவல் வெளியாகவில்லை.
காயம் அடைந்தவர்களை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மருத்துவமனைகளில் சேர்க்க அரசின் அனைத்து துறைகளும் ஒன்றாக இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில் ரஷிய ராணுவம் நடத்
ஈரான் அதிபா் தோதலில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற தலைம
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து
பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் அமெரிக்கா, சீனா இடையே உ
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், அமெரிக்க
சீனாவை சேர்ந்த சர்வதேச தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஹூ
ஜேம்ஸ் பாண்ட் பட ஹீரோ டேனியல் கிரேக்கிற்கு, இங்கிலாந்
தென் ஆப்ரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைது
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி நிலையமொன்ற
ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமராக இருந்த
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சுவிட்சர்லாந்து
இஸ்ரேல் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை
ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரத்தில், ரஸ்யா நிர்வ
