தெல்லிப்பழை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன் வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருள்களைத் திருடிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து திருடப்பட்ட ஐ போன் ஒன்று, நான்கு சைக்கிள்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
சுன்னாகம் மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய இருவரே நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தெல்லிப்பழை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் இரண்டு நாள்களுக்கு முன்னர் திருட்டு இடம்பெற்றிருந்தது. அதுதொடர்பில் தெல்லிப்பழை காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், சந்தேகநபர்கள் இருவரைக் கைதுசெய்ததுடன் திருட்டுப் பொருள்களையும் அவர்களிடம் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவருக்கும் வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் காவல்துறையினர் கூறினர்.
அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் பதவிக்கு தெரிவ
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 2
அரசு, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால்கூட அதனை எதிர்கொள்
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 916 பேர் பூரணம
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர்
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த ம
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச்
ஊடகவியலார்களுக்காக நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் தே
நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டுப்படுத
கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலைச் சிறுமிய
வயோதிப தாயொருவருக்கு நேற்றைய தினம் வவுனியா நெடுங்கேண
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவினால் மரணிப்பவர்களை அ
மகா சங்கத்தினரின் திட்டத்தின் படி கோட்டாபய ராஜபக்ச மக
இலங்கை அதிபர், பிரதமர் ஆகியோர் பதவி விலகக்கோரி நேற்று 1
