உஸ்பெகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் அந்நாட்டின் தாஷ்கண்ட் நகரில், ஆப்கானிஸ்தான் நாட்டு அதிபர் அஷ்ரப் கனியை சந்தித்துப் பேசினார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக ராணுவம் மற்றும் தலிபான் பயங்கரவாதிகள் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் ஆதரவாக உள்ளனர்.
அமெரிக்கப் படையினர் வெளியேறி வரும் சூழலில், தலிபான்கள் நாட்டின் நிலப்பரப்புகளைக் கைப்பற்றி வருகின்றனர். அந்த நாட்டின் 421 மாவட்டங்களில் 3ல் ஒரு பகுதி தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என கூறப்படுகிறது.
இதில் ஏராளமான மாவட்டங்கள் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஈரான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான எல்லைப் பகுதிகளாகும்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி உடன் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நடத்திய சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய மந்திரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடப்பு சூழல் பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் நாட்டின் வளர்ச்சி, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கான நம்முடைய ஆதரவு இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.
ரஷ்யாவிடம் இருந்து பெறும் மசகு எண்ணெய்க்கு அமெரிக்கா
மியான்மரில் கடந்த பிப்ரவரி முதல் தேதியன்று, ஆங் சான் ச
எதிர்கொண்டிருந்த நிலையில் தப்பியோடிய கைதி ஒருவரையும
ஜேம்ஸ் பாண்ட் பட ஹீரோ டேனியல் கிரேக்கிற்கு, இங்கிலாந்
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்
ரிஷி சுனக் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் வெற்றி
உக்ரைன் விவகாரத்தில் பிரித்தானியாவின் நிலை குறித்து
கிழக்கு மத்தியதரைக் கடலில் துருக்கிய சவால்களை எதிர்க
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு
ஆப்கானிஸ்தானில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட ந
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த சில மாதங்க
ஆசியா மற்றும் ஆப்ரிக்கா முழுவதும் துறைமுகங்கள் மற்று
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இ
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தை கட்டுப்
